பக்கம்:கோயில் மணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

22

“அவர்கள் வீட்டுக் குழந்தையின் வளையை ஒரு நாள் இவன் கழற்றப் போனானாம்” என்று யாரோ மூக்கு முழி வைத்து ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்.

பாவம்! காத்தான் பாதிச் சாப்பாட்டிலே எழுந்து போய்விட்டான். அவன் இலையில் விண்டபடியே கிடந்தது குஞ்சாலாடு !

ராமு வீரிட்டு அழுதான்; விம்மினான், அம்புஜம் அவனை அதட்டினாள்; கடுகடுத்தாள். நாராயணன் சங்கதியைக் கேட்டு அவளைக் கடிந்துகொண்டார்.

“சேரியே திரண்டு வந்து உன்னைப் பழி வாங்கப் போகிறது!” என்று பயமுறுத்தினானர்.

குழந்தை அழ, அம்புஜம் சிணுங்க, அந்த வீடே மூதேவி பிடித்தது போல் ஆகிவிட்டது. அதற்குமேல் அம்புஜம் பஜனைக்குப் போகவில்லை; வீட்டிலேயே கிடந்தாள். குழந்தை அழுதழுது முகம் வீங்கித் தூங்கிப் போய்விட்டான்.

சாயங்காலம் பஜனை நடந்தது. கற்பூரம் காட்டி விட்டு அந்தத் தட்டைச் சுவாமிக்கு அருகில் வைத்தார் பூசை செய்தவர். ஒரு சிறு காற்று அடிக்கவே, கற்பூரத் தீபக் கொழுந்து பக்கத்தில் அலங்காரம் செய்திருந்த காகிதத்தில் தாவிப் பற்றியது. பிறகு துணியைத் தாவியது. கிருஷ்ணன் படம் தனியாகவும் ராதையின் படம் தனியாகவும் இருந்தன. கிருஷ்ணன் படத்தின் அலங்காரங்களில் தீப்பற்றி விட்டது.

ஒரே கலவரம். தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி அணைத்தார்கள். கிருஷ்ணன் படம் முழுவதும் எரிந்து போயிற்று. ராதையின் படத்தை வலிய இழுத்துக் காப்பாற்றினார்கள். இந்தக் கலவரத்தில், மத்தியான்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/28&oldid=1382774" இலிருந்து மீள்விக்கப்பட்டது