பக்கம்:கோயில் மணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

23

நடந்த கல்யாணத்தின்போது ராதை படத்தில் ஒட்ட வைத்திருந்த திருமங்கலியப் பொட்டு எங்கேயோ கழுவி விட்டது.

பக்தர்களுக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டு சொல்லொணாத் துயரம் குமுறி வந்தது. “இத்தனை பாகவதர்களில் யார் செய்த அபசாரமோ தெரியவில்லையே!” என்று நைந்தார்கள். “எந்தப் பாவியின் கண் பட்டதோ? இப்படி ஆகி விட்டது” என்று சில பெண்கள் மனம் கரைந்தார்கள். “நல்ல வேளை! கல்யாணம் எல்லாம் ஆகி உற்சவம் முடிகிற தருணத்தில் இப்படி ஆயிற்றே” என்று சிலர் சமாதானம் செய்து கொண்டார்கள். எல்லோரும் இந்தச் சம்பவத்தை எண்ணி அங்கலாய்த்தார்கள்.

மறுநாள் குழந்தை ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவர் அவனுக்குப் பயத்தைத் தெளிவித்துத் தடவிக் கொடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

“ராமு, நாளைக்குப் பீச்சுக்குப் போகலாமா?” என்று அப்பா கேட்டார்.

பையன் பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

“எந்த ராஜ்யத்தைப் பிடிக்க யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று நாராயணன் கேட்டார்.

“நேற்று நெருப்புப் பற்றிக் கொண்டதே...”

“அதைப்பற்றி என்ன இப்போது?”

“அம்மா எங்கள் கண்ணனைச் சாப்பிடும்போது அடித்துத் துரத்தினாள். அதனால் இந்தக் கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/29&oldid=1382776" இலிருந்து மீள்விக்கப்பட்டது