பக்கம்:கோயில் மணி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கோயில் மணி

“ஏன்?”

“இந்தப் பால் எவ்வளவு ருசியாக இருக்கிறது! நாம் இதுவரையில் வெள்ளைத் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டிப் பால் என்று குடித்துக் கொண்டிருந்தோம். இப்போது பாலுக்குத் தித்திப்பு இருக்கிறது என்ற அதிசயத்தைக் கண்டு கொண்டோம்” என்று குதூகலத்தோடு பேசினாள்.

இரண்டு மூன்று மாதங்கள் உண்மையிலே நல்ல காபியும் நல்ல பாலும் குடித்தோம். அப்புறம் மழைக் காலம் வந்து விட்டது. அதற்கு முன்பே மாட்டுக் கொட்டகைப் பக்கம் கொஞ்சம் சகதியிருந்தது. ஆள்காரன் அதைச் சுத்தம் பண்ணவில்லை. வேறு ஓர் ஆளை விட்டுச் சுத்தம் பண்ணி மணல் போடச் சொன்னேன்.

மழை வந்தவுடன் மாட்டுக் கொட்டகைப் பக்கம் ஒரே சேறாகி விட்டது. போதாக் குறைக்குக் கொசுத் தொல்லை வேறு உண்டாயிற்று. ஆள்காரன் முப்பது ரூபாய் தந்தால்தான் வேலை செய்ய முடியும் என்றான். அப்படியே கொடுத்தேன். ஆனாலும் அவன் மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்யமாட்டேன் என்று சொல்லி விட்டான். அதனால் பின்பக்கம் போனால் ஒரே நாற்றம்; கொசுத்தொல்லை. வீட்டில் கொசுக்கடி பொறுக்க முடியவில்லை.

நாலு நாள் ஆள்காரன் வரவில்லை. என் மனைவிக்கு மாட்டுக்குப் பக்கத்தில் போகப் பயம். பழைய பால்காரரைக் கூப்பிட்டுக் கறக்கச் சொன்னாள். அவர் வந்து மாட்டையும் கொட்டகையையும் பார்த்தார். “ஒரே கையால் கறக்க வேண்டும். மாற்றுக் கைபட்டால் புண் வந்துவிடும்” என்று சொல்லிப் போய்விட்டார். போகும் போதே, “பால் மிஞ்சினால் கொடுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/38&oldid=1382798" இலிருந்து மீள்விக்கப்பட்டது