பக்கம்:கோயில் மணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

37

என் மனைவிக்குக் கோபம் வந்தது.

“ஆமாம், அந்த மனிதரால் தானே இந்தச் சங்கடம் வந்தது?” என்று சீறினாள்.

கடைசியில் இருநூறு ரூபாய்க்கு விற்பது என்ற முடிவுக்கு வந்தோம். பால்காரரிடம் சொல்லிச் சம்மதிக்கச் செய்வதற்குள் பெரும் பாடாகப் போய் விட்டது. “ஐம்பது ரூபாய் பணம் கொடுத்துக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதற்குக் கொஞ்சம் வைத்தியம் பண்ண வேண்டும்” என்றார். கடவுளே என்று அந்தப் பணத்தைக் கொடுத்துப் பசு மாட்டையும் ஓட்டிக் கொண்டு போகச் சொன்னேன்.

இப்போது வீட்டுக்குப் பின்புறம் சுத்தமாக இருக்கிறது. கொசுத் தொல்லை இல்லை. ஆனால் பழைய படி தண்ணீர்ப் பாலைத்தான் வாங்குகிறோம். பழைய சண்டைதான், கூச்சல்தான். நாங்கள் விற்ற மாடு மிகவும். நன்றாக இருக்கிறது என்று யாரோ சொன்னர்கள். அதை ஒரு நாள் கூடப் பால்காரர் எங்கள் கண்ணிலே காட்டவில்லை.

பழையபடி அவருடைய குவளை வித்தையைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/43&oldid=1382808" இலிருந்து மீள்விக்கப்பட்டது