பக்கம்:கோயில் மணி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

41

சென்னை மாநகரில் ஒரு சேரியில் வசித்தாலும், அவர் வேலை செய்தது பணம் புரளும் பெரிய பாங்கியில் அங்கே சாவல் செய்யும் வேலை; அவ்வளவுதான். தமக்குக் கிடைத்த சின்னச் சம்பளத்தில் மாசத்துக்கு ஒரு முறை வடபழனிக் கோயிலில் சிறிய அபிஷேகம் செய்யா விட்டால், அவருக்குச் சம்பளம் வாங்கிய திருப்தியே இராது. அவருடைய மனைவி சாது; உழைப்புக்கு அஞ்சாதவள்; யார் வீட்டிலோ வேலை செய்து பத்துப் பன்னிரண்டு ரூபாய் சம்பாதித்தாள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. செக்கச் செவேலென்ற நிறமும் கண்ணும் மூக்கும் யார் கண்டாலும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொஞ்சவேண்டுமென்று தோன்றும்.

இந்த இடத்துக்கு அருகிலுள்ள ரோடு வழியே காய் கறி விற்கும். பேர்வழி ஒருவர் தம் கூடைகளை ஒரு கை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே போவார். அங்கங்கே சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தார் அவர். ஒரு நாள் அவர் வேகமாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போகும் போது, காளிமுத்துவின் குழந்தை அந்தப் பக்கமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அது ரோடைத் தாண்டும் போது, காய்கறி வண்டி வந்து விட்டது. ஒரு கணம் தப்பியிருந்தால், குழந்தையின் மேல் சக்கரம் ஏறியிருக்கும். நல்ல வேளை! காய்கறிக்கரரக் குப்புசாமி நிதானித்துக் கொண்டார்; சட்டென்று வண்டியை ஒடித்துக்கொண்டார். வண்டியில் இருந்த ஒரு கூடை கீழே சாய்ந்துவிட்டது. குழந்தையும் இந்தக் கலவரத்தில் கீழே தடுக்கி விழுந்தது. குப்புசாமி வண்டியை விட்டு, கூடையைத் தூக்காமல் குழந்தையைத் தூக்கித் தடவிக் கொடுத்தார். ஒரு தக்காளிப் பழத்தைக் கொடுத்து ஆறுதல் சொன்னார். “நீ எங்கே இருக்கிறாய் குழந்தாய்?” என்று கேட்டு, அதனுடன் காளிமுத்து-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/47&oldid=1382826" இலிருந்து மீள்விக்கப்பட்டது