பக்கம்:கோயில் மணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கோயில் மணி

“இந்த உடம்பைத் தந்த பெருமானுக்கு அது கூடச் செய்யாமல் இருக்கலாமா?” என்று காளிமுத்து உரைத்ததைக் கேட்ட போது குப்புசாமிக்கு ஒருபக்கம் ஆச்சரியமும், ஒரு பக்கம் இரக்கமும் உண்டாயின.

ஒரு நாள் திடீரென்று அந்தக் குடிசைக்குள் ஒரு ஜோடிப் புதுச் செருப்பு இருந்தது. அதைக் காளிமுத்து பார்த்து, “இது ஏது?” என்று தம் மனைவியைக் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே!” என்றாள்.

தம் குழந்தை எங்கே இருந்தாவது கொண்டு வந்து வைத்து விட்டாளோ என்று எண்ணி விசாரித்தார். அப்படியும் நடந்ததாகத் தெரியவில்லை. செருப்பு, புத்தம் புதியதாக இருந்தது.

“நம் வீடு தேடி வந்திருக்கிறது. நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்” என்றாள் அவர் மனைவி.

“இதைப் போட்டுக்கொண்டு வீதியிலே போகும் போது எவனாவது திருட்டுப் பட்டம் கட்டி இழுத்துப் போக வேண்டுமா?” என்று கேட்டார் காளிமுத்து.

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் காய்கறி வண்டிக் குப்புசாமி அங்கே வந்து சேர்ந்தார். அவள் அவரிடம் செருப்பைப் பற்றிச் சொன்னாள். “வடபழனி ஆண்டவனே தம்பிக்கு இரங்கி இந்தச் செருப்பைக் கொண்டு வந்து போட்டிருக்கலாம், ஆண்டவன் அருளாகத்தான் இருக்கும்” என்று குப்புசாமி சொன்னார்.

“என் ஆண்டவனை எனக்குத் தெரியும் அண்ணே. அவன் எனக்குச் செருப்புத்தர வேண்டுமானால், இப்படிக் கொண்டு வந்து வைக்க மாட்டான்” என்று சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/50&oldid=1382835" இலிருந்து மீள்விக்கப்பட்டது