பக்கம்:கோயில் மணி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

47

“உங்கள் பழைய செருப்பிலிருந்து.”

“அதுதான் காணாமற் போய்விட்டதே!”

“அவரே அதை எடுத்துக்கொண்டு போனாராம்.”

“அப்படியானால், அந்தப் பழஞ் செருப்பை மறுபடியும் கொண்டுவந்து போடச் சொல்.”

“அதை எங்கேயோ தூக்கி எறிந்து விட்டாராம்.”

“சரிதான். அப்படியானால் நானாகப் புதுச் செருப்பு வாங்குகிற வரைக்கும் வெறுங் காலோடு நடக்கிறேன். என் கால் தேய்ந்து போகாது. நான் இப்படி நடக்க வேண்டுமென்பது ஆண்டவன் திருவுள்ளம். அதனால் இப்படி ஒரு வேடிக்கை செய்திருக்கிறான்.”

அவர் இப்படிச் சொல்லிப் பாங்கிக்குப் போய் விட்டார்.

மறுநாள் குப்புசாமி வந்தார். அப்போது காளிமுத்து வீட்டில் இருந்தார். அவரைக் கண்ட காய்கறிக்காரர் அழாக்குறையாக, “தம்பி, நான் பெரிய தப்புப் பண்ணி, விட்டேன். அந்தப் பழஞ் செருப்பை நான்தான் திருடி எங்கேயோ எறிந்துவிட்டேன். புதுச் செருப்பை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன். பாவி! இப்போது தம்பி வெறுங் காலோடு நடப்பதைப் பார்க்கிற போது நான் பெரிய பாவம் செய்துவிட்டதாக எண்ணுகிறேன். எப்படியாவது நீங்கள் செருப்பைப் போட்டுக்கொண்டு நடக்க வேண்டும்” என்று கெஞ்சிய குரலில் கூறினார்.

“அண்ணே, நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேட்க வேண்டும். நீங்கள் என்னுடைய அண்ணனைப் போல. ஆனாலும் நாங்கள் உங்களுக்கு ஓர் உபகாரமும் செய்யவில்லை. அப்படியிருக்க இதை வாங்கிக் கொள்ள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/53&oldid=1382846" இலிருந்து மீள்விக்கப்பட்டது