பக்கம்:கோயில் மணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மங்க்—கீ !

ங்க்-கீ!”-அவனுடைய குரல் வாசல் நிலையைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. டார்ஸான் தன் அருமை மகனைக் கூப்பிடுவது போலக் கூப்பிட்டான் அவன். குழந்தை சுந்தரி உள்ளேயிருந்து ஓடிவந்தாள். குரலோ உள்ளே போய் லலிதாவினுடைய குடலைக் குழப்பியது.

அவன் முகத்தில் சிரிப்பு; குழந்தைக்கு அப்பாவைக் கண்டு ஆனந்தம். அந்தச் சொல்லுக்கு இன்ன அர்த்தம் என்று அதற்குத் தெரியுமா, என்ன? ஆனால் பெற்ற தாய் கண்ணிலோ நீர்த்துளி ததும்பும். இது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல; தினந்தோறும் நடக்கும் காட்சி; கேலிச் சித்திரக்காரன் ‘பராய்’ வீட்டில் நடைபெறும் காட்சி.

‘பராய்’ என்ற பெயரைக் கொண்டு அவனை மங்களூர்க்காரனோ, அஸ்ஸாம்காரனே என்று எண்ணி விட வேண்டாம். அவன் சுத்தத் தமிழன். சுப்பராயன் என்ற திருநாமத்தையே அப்படிக் கோணலாகக் குறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்.

யார் வீட்டிலாவது குழந்தை பிறந்திருக்கும். அந்தச் செய்தியைத் தன் பாணியில் அவன் சொல்வான்; “அந்த வீட்டில் ஒரு புதிய அழுகை புறப்பட்டிருக்கிறது” என்று. “இது பராயின் வக்கணை” என்பான். பெண் குழந்தை பிறந்தால், “ஊருக்குப் பிறந்திருக்கிறது” என்பான். ஆணாக இருந்தாலோ, “கொள்ளி வைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/58&oldid=1382870" இலிருந்து மீள்விக்கப்பட்டது