பக்கம்:கோயில் மணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

ந்த ஆண்டுதான் அது பூத்திருந்தது. பருவம் அடைந்த மங்கையைப் போல் அவருக்கு அது காட்சி அளித்தது. பச்சைப் பசிய வானத்திலே அங்கங்கே கொத்துக் கொத்தாக நட்சத்திரங்கள் ஒளிவிட்டால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது. அடர்ந்து வளர்ந்த பசுமைச் சூழலினிடையே சிறிய சிறிய வெள்ளை மலர்கள். அதற்கு ஒரு தனி மணம். இறைவனுடைய படைப்பில் உள்ள கலை அழகைக் காட்டும் மரம் அல்லவா அது? இரு புறமும் ஒழுங்காகக் கத்தரித்து விட்டது போன்ற அமைப்பு; நடுவே நரம்பு. கிளை நரம்புகள் இரு பக்கத்திலும். அடர்த்தியான புருவத்துக்கு இந்த இலையைத்தானே புலவர்கள் உவமை கூறுகிறார்கள்?

மூன்று நான்கு ஆண்டுகளாக வளர்ந்தும் இப்பொழுதுதான் மலர்ந்திருக்கிறது. அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தார் அவர். தம்முடைய வீட்டில் தாம் வேலை செய்யும் அறையின் சன்னலுக்கு எதிரே அது இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு வளர்த்தார். வீடு மேற்குப் பார்த்தது. சன்னல் தெற்குப் பார்த்தது. அந்த மரத்தின்மேல் பட்டு வரும் காற்றுக்குத் தனி மகிமை உண்டல்லவா?

தாம் பெற்று வளர்த்த பெண் அலங்காரங்களுடன் மணப் பலகையில் உட்காரச் செல்லும்போது தந்தை கண் குளிரப் பார்ப்பானே, அப்படிப் பார்த்து மகிழ்ந்து போனார். இந்த ஆண்டு வருஷப் பிறப்புக்கு அது தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/64&oldid=1383914" இலிருந்து மீள்விக்கப்பட்டது