பக்கம்:கோயில் மணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

59

மலர்களை உதவும். விலைக்கு வாங்க வேண்டாம். பிறரிடம் யாசகமும் செய்ய வேண்டாம்.

நீண்ட மெல்லிய பச்சைத் தண்டிலே சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள் தொங்கின. சன்னல் வழியே அவற்றின் உருவம் நன்றாகத் தெரிந்தது. ‘இதன் இலை, பூ, பட்டை எல்லாம் மனிதனுக்குச் சஞ்சீவி அல்லவா ?’ என்று அதன் பெருமையை எண்ணினார்.

முத்துசாமி தாம் வைத்து வளர்த்த வேப்பமரத்தை அழகு பார்த்துக் கொண்டிருந்தார். அதன் முதல் மலர்ச்சியிலே அவர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார். அப்போது அவருடைய பெண் ஓடி வந்தாள். “அப்பா, அப்பா, அந்தச் சின்னப்பன் இல்லே......” என்று எதையோ ஒரு செய்தியைச் சொல்ல வந்தாள்.

முத்துசாமியின் கண்கள் தாம் வளர்த்த மங்கையினிடமிருந்து திரும்பித் தாம் பெற்ற செல்வத்தைப் பார்த்தன. அவர் வாயில் புன்முறுவல் அரும்பியது. இந்தக் குழந்தையும் ஒரு நாள் இந்த மரத்தைப் போல மங்கையாகப் பூசித்து நிற்கும் பருவம் வரும் என்று தினைத்தாரோ? ஆம். உடனே அந்த முறுவலிலே சிறிது வாட்டமும் தொடர்ந்து தோன்றியது. வேப்பமரம் பூத்துக் குலுங்கினால் அதைக் கவலையின்றிப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தச் சிறு கொடி அப்படி அல்லவே? இந்தக் கொடி பூத்தால் இதைப் படாவிட ஒரு மரம் தேட வேண்டுமே! பெண்ணைப் பெற்ற தந்தைக்கு இது பெரிய பொறுப்பல்லவா? இந்த எண்ணந்தான் அவர் உள்ளத்துள்ளே வேகமாக ஓடியிருக்க வேண்டும். வேப்பமரம் அத்தகைய கவலையை அவருக்கு வைக்கவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/65&oldid=1383917" இலிருந்து மீள்விக்கப்பட்டது