பக்கம்:கோயில் மணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கோயில் மணி

“திருட்டு நாய்க்கு ரோசத்தைப் பார்!” என்று அவர் ஓடவிட்ட நாயைக் கண்டு குரைக்கும் நாயைப் போலக் கத்தினார்; “இந்தப் பயல்களுக்கு இடம் கொடுத்தாள் வீட்டுக் கூரையையே பட்டப் பகலில் பேர்த்துக் கொண்டு போய் விடுவார்கள். நான் என் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வருகிறேன். இந்தக் கழுதை வந்து ஓடிக்கிறதாவது கேட்டால் வேப்பிலைதானே என்கிறான், வேப்பிலை என்னால் வீதியில் இறைபடுகிறதா?” அவர் கத்திக் கொண்டே இருந்தார். .

“அப்பா, அம்மா குளிக்கச் சொல்கிறாள்” என்று அவளுடைய பெண் குழந்தை நினைவு மூட்டினாள். குளிப்பறைக்குச் சென்று மடமடவென்று நாலைந்து செம்பு குளிர்ந்த நீரை எடுத்துத் தலையில் ஊற்றின பிறகே அவர் கோபம் கொஞ்சம் தணிந்து நிதானம் பிறந்தது.

‘இதற்குப் போய் இவ்வளவு பிரமாதப்படுத்தினோமே!’ என்ற எண்ணம் கூடத் தலை காட்டியது.

சாப்பிடத் தட்டின்முன் அமர்ந்தபோது அவருடைய பத்தினித் தெய்வம், “என்ன, காலை நேரத்தில் அப்படி இரைந்தீர்களே!” என்று கேட்டாள்.

“சின்னப்பனோடு சண்டை போட்டார் அம்மா” என்று பெண் குழந்தை விளக்கினாள்.

அவர் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டுக் கம்பெனிக்குப் போய்விட்டார்.

மாலை நேரம். அன்று ஏதோ புதிய நாவலை வாசித்துக் கொண்டிருந்தார் முத்துசாமி. ஏழைகளைப் பணக்காரர்கள் அலட்சியம் செய்வதையும், அவர்களுடைய உணர்ச்சிகளைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் ஆசிரியர் அந்த நாவலில் நன்றாகக் கதைப் போக்கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/68&oldid=1383922" இலிருந்து மீள்விக்கப்பட்டது