பக்கம்:கோயில் மணி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

65

அன்று அவருக்குச் சரியான தூக்கமே இல்லை. அந்த வேப்பமரத்திலே நூறு குழந்தைகள் ஏறிக் கொண்டு விளையாடுகிறார்கள். அடுத்த கணத்தில் அத்தனை பேரும் பாம்புகளாக மாறுகிறார்கள். மரத்தின் அடியில் நாலைந்து பிணம். காற்றுப் பேயாய் அடிக்கிறது. அந்தக் காற்றினிடையே அவருடைய பெண் குழந்தை கிடந்து தடுமாறுகிறது. அதனுடைய தலை முடியைக் காற்று அலைத்துப் பிய்க்கிறது. சின்னப்பன் ரிக்‌ஷா வண்டியை இழுத்துக்கொண்டு போகிறான். அதில் நிறைய வேப்பந்தழை; அடுத்த கணம் ஏதோ குழந்தையின் பிணம்! பாதிக் கனவில் அவர் விழித்துக்கொண்டார்.

ஒரு வாரம் ஆயிற்று, அவருக்கு நிதானம் உண்டாக. இனிமேல் வேப்பந்தழையை யார் ஒடித்தாலும் கேட்பதில்லை என்று ஒரு விரதம் மேற்கொண்டார்.

2

ர் ஆண்டு ஆகியிருக்கும். அவர் எங்கோ கம்பெனி வேலையாகப் போயிருந்தார், மறுபடியும் ஊருக்கு வந்தார். அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அவருடைய வேப்பமரத்தை நன்றாக மொட்டையடித்திருந்தார்கள். அவர் மனைவியைக் கேட்டார். “அது பேயாய்ப் படர்ந்து பழுப்பு இலைகளைக் குப்பை குப்பையாகக் கொட்டியது. யாரோ ஒருவன் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னான். வெட்டிக்கொண்டு போ என்று சொல்லிவிட்டேன். நேற்றுத்தான் தழை முழுவதையும் வெட்டிக்கொண்டு போனான்” என்றாள். வேப்பமரத்தை அவர் நன்றாகப் பார்த்தார். முழு மொட்டையாக இருந்தது. இப்போது அவருக்குக் கோபம் வரவில்லை. சில மங்கையர் திருப்பதிக்குச் சென்று

கோயில்-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/71&oldid=1383932" இலிருந்து மீள்விக்கப்பட்டது