பக்கம்:கோயில் மணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

69

சின்னப்பன் இடைமறித்தான்; “இதெல்லாம் இப்போது எதற்கு ஐயா பேசவேண்டும்? உதிர்ந்த இலைகளைப் பொறுக்கி என்ன சுகம் அந்த இலைகளை எடுத்துச் சாம்பலாக்கி விடலாம். .அவ்வளவுதான். மறுபடியும் பசுமை ஏறுமா?”

முத்துசாமிக்கு அவன் ஞானம் தமக்கு இல்லையே என்று தோன்றியது.

“நம் வீட்டுக்கு வேப்பிலே தந்தாயாமே?”

“ஆமாம் குழந்தைக்குத் தலைக்குத் தண்ணீர் விட்டாயிற்றல்லவா ?”

“உன்னுடைய புண்ணியத்தாலே விட்டாயிற்று...”

“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? சாமி புண்ணியத்திலே என்று சொல்லுங்கள்.”

“இவன் நந்தனாரைப் போலல்லவா பேசுகின்றான்?” என்றது உள்ளம்.

“எங்கிருந்து வேப்பிலை பறித்தாய்?” இது ஒரு பெரிய கேள்வியாக அவருக்குத் தோன்றியது.

“நீங்கள் வேப்பிலே ஒடிக்க வேண்டாம் என்று சொன்ன மறுநாளே எங்கள் குடிசைக்குப் பக்கத்தில் ஒரு செடி வைத்து வளர்த்தேன்.”

“ஆமாம் நான் பாவி! உன் குழந்தை...”

“கடவுள் சித்தம் எதுவோ அதுவே நடக்கும் ஐயா; குழந்தை போனாலும் வேப்பஞ்செடி வளர்ந்தது. அது சமயத்துக்கு உபயோகப்பட்டது. அதிலிருந்துதான் தழை ஒடித்துத் தந்தேன்.”

இது அவருக்கு மேலும் பிரமிப்பைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/75&oldid=1383940" இலிருந்து மீள்விக்கப்பட்டது