பக்கம்:கோயில் மணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியம் ஒரிடம்

73

நிரம்பிய அந்த இருட்டுக் குகைகளில் மழையும் பெய்து விட்டால் கேட்கவே வேண்டாம். குஞ்சும் குளுவானுமாகக் குடிசையிலிருந்து மரத்தடிக்கும், மரத்தடியிலிருந்து மாளிகைகளின் சுவரோரங்களுக்கும் ஏழைகள் குடியேறும்போது அவர்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகிய நாய்களும் ஆடுகளும் கோழிகளும் படைகளாக அவர்களைத் தொடரும்.

இவையெல்லாம் ஆண்டு தோறும் வழக்கமாகப் பெய்யும் மழையின்போது நிகழும் நிகழ்ச்சிகள். ஆனால் இப்போதோ, ஒரே பிரளயம். கடல் பொங்கவில்லை; ஆனால் மேகம் கடலையே வானத்திலே பொங்க விட்டுப் பொழிந்து தள்ளியது. சாதாரண மழைக்கே வெளியிலே பொங்கும் சாலைக்குழிகள் இந்த மழையில் எத்தனையோ பேர்களைப் பலி கொண்டு விட்டன.

சென்னையில் புனிதத்தை உண்டாக்கும் கூவமும் அடையாறும் வரலாற்றில் இல்லாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடின. மற்ற நாட்களில் கடல் நீர் செல்வதற்கு வெட்டிய கால்வாய்களைப் போன்று எதிரே வரும் நீரோட்டத்தை உடையனவாக இருந்த அவற்றில் இப்போது உண்மையாகவே வெள்ளம் நிரம்பிக் கடலில் போய் விழுந்தது.

மற்றொரு புண்ணிய ஆறு சென்னையில் இருக்கிறது. அதற்குப் பக்கிங்காம் கால்வாய் என்று பெயர். அதன் கரையில்தான் பலபல தலங்கள் - சேரிகள் - இருக்கின்றன. இந்த வெள்ளத்தில் சேரிகளிற் பல வெள்ளப் பரப்பில் மிதந்தன. குடிசைகளில் உள்ள தகரங்களையும் கந்தைகளையும் சுருட்டிக் கொண்டு ஏழைகள் பக்கத்து வீதிகளில் அடைக்கலம் புகுந்தனர். மழை நின்ற பாடு இல்லை. இந்த ஏழைகள் நூறா, இரு நூறா ஆயிரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/79&oldid=1383949" இலிருந்து மீள்விக்கப்பட்டது