பக்கம்:கோயில் மணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80.

கோயில் மணி

கூத்தைப் பார்த்தீர்களா?” என்று தம் கையில் இருந்த காலைப் பத்திரிகையைப் பிரித்துக் காட்டினர்.

அந்தப் பக்கம் முழுவதும் நிழற் படங்கள். மேலே கொட்டையெழுத்தில் தலைப்பு; “நம்முடைய தலைவர் போசல ராவின் அருமைத் திருத்தொண்டு அவரே ஏழைகளுக்குத் தம் கையால் பரிமாறுகிறார்” என்பது ஒரு படத்துக்கு விளக்கம்.

“நம் விளம்பர மானேஜர் ஏழைகளுக்குச் சாம்பர் பரிமாறுகிறார்.” இது மற்றொரு விளக்கம்.

கிழவர், “அட கலி காலமே” என்று வாயைப் பிளந்தார்.

“அப்படிச் சொல்லாதீர்கள். நீங்களும் கலிகாலத்தில் தான் இருக்கிறீர்கள். அரசியல் விளம்பரம் இது. அந்த விளம்பர மானேஜரே இந்த ஏற்பாடு செய்திருப்பார். அவருக்கு எத்தனை சம்பளம் வேண்டுமானலும் கொடுக்கலாம்” என்றார் தொண்டர்.

கிழவர் மெளனத்தில் ஆழ்ந்தார். பிறகு, “புண்ணியம் ஓரிடம், புகழ் ஓரிடம்” என்ற மொழி ஒன்று அவர் வாயிலிருந்து நழுவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/86&oldid=1383963" இலிருந்து மீள்விக்கப்பட்டது