பக்கம்:கோயில் மணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

3

கடிகாரம் இருக்கிறது. அஸ்தமனத்துக்குரிய நேரத்தில் கணக்காகக் கர்ப்பூர தீபம் காட்டும்படி பூசையை ஒழுங்கு பண்ணிக்கொள்வார்.

சிவன் கோயில் சாமிநாத குருக்களுக்கு இது தெரியாது. முத்துசாமி குருக்களிடம் இந்தக் கணக்கைத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றவில்லை.

முருக முதலியார் அடிக்கடி அவரிடம் குறை கூறுவார்; “அந்தக் கோயிலில் டாண் என்று அஸ்தமன சமயத்துச்குச் சாயங்கால பூசை நடக்கிறது. நீர் நிதானமாக இருட்டின பிறகு செய்கிறீரே சிவன் கோயிலில் பிரதோஷ காலம் மிகவும் முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தப் பூசைக்கு எவ்வளவு மகத்துவம் நீர் இதையெல்லாம் கவனிக்கிறதே இல்லை” என்று கடிந்துகொள்வார்.

அந்தக் குருக்கள் என்ன செய்வார் சூரியன் தெரியாத காலங்களில் ஆறேகாலுக்குப் பூசை செய்வார். முருக முதலியாருக்கு அகஸ்கணக்கு என்று ஒன்று இருப்பதே தெரியாது. வானம் மூடியிருக்கும்போது எப்படித் தெரிந்து கொள்ள முடியும் என்றும் யோசிக்க வில்லை. அவருக்கு ஒரே குருட்டு எண்ணம்; “அந்தக் குருக்கள் செய்யும்போது இவர் ஏன் செய்யக்கூடாது?” என்பதுதான். அதை வாய் விட்டுப் பலமுறை சொல்லி விட்டார்.

அன்று சோமவாரம். விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. வெறும் சோமவாரம் அன்று; கார்த்திகைச் சோமவாரம். கார்த்திகை முதல் தேதியே சோம வாரமாக வந்துவிட்டது. ஐப்பசி மழை இன்னும் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. முருக முதலியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/9&oldid=1382731" இலிருந்து மீள்விக்கப்பட்டது