பக்கம்:கோயில் மணி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கோயில் மணி

தான். அவர் சிறிதே தயங்கினர். “தைரியமாகச் சொல்லப்பா” என்றான் மாயன்.

“சுவாமி, இதோ இவர் துவாரகையிலிருந்தே வந்திருக்கிறார். நன்றாகப் பாடுவார். ஒரு பாட்டுப் பாட இடம் கொடுங்கள்” என்று மெல்லச் சொன்னர் நாதர்.

அப்போது அந்தப் பாகவதருக்கு வந்த ஆவேசத்தைப் பார்க்கவேண்டுமே! “ அப்படியா சமாசாரம்? என்னைப் பரிகாசமா செய்கிறீர்” என்று குமுறினார். துவாரகை என்று சொன்னது உண்மை என்பது அவருக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் நாரதரையும் கண்ணனையும் பார்த்தார்கள்.

கலவரம் அதிகமாகப் போகிறதே என்று பயந்து ஒருவர் எழுந்து வந்து பாகவதர் காலில் விழுந்து, “சுவாமி, கோபித்துக்கொள்ளக் கூடாது. நீங்களே பாடுங்கள். அறியாதவர்கள் ஏதாவது சொன்னால் நீங்கள் அதைப் பொருட்படுத்தலாமா?” என்று வேண்டினார்.

“அதுதான் சொல்கிறேன். இந்த முட்டாள் பயல்கள் எல்லாம் பாட வருகிறார்களாம். அந்தக் கண்ணனே வந்து நான் பாடுகிறேன் என்றாலும் இந்தப் பாகவத சிரோமணி இடம் கொடுப்பானா, என்ன?” என்று இரண்டாம் முறையும் மாரைத் தட்டிக்கொண்டார்.

கண்ணன் மெதுவாக நாரதர் காதில், “நமக்கு இங்கே இனி வேலை இல்லை; வா போகலாம்” என்று சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு நழுவி விட்டான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/90&oldid=1383974" இலிருந்து மீள்விக்கப்பட்டது