பக்கம்:கோயில் மணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுக்குக் கால் வலித்தது

85

சிறிது தூரம் நடந்து சென்று நகரத்தின் வேறு ஒரு பகுதிக்கு வந்தார்கள். அங்கே ஓரிடத்தில் பஜனை நடந்துகொண்டிருந்தது. பஜனை நடந்த இடத்தை வைகுண்டம் மாதிரி அலங்காரம் செய்திருந்தார்கள். கண்ணைப் பறிக்கும் விளக்குகள், ஜோடனைகள், மாலைகள்; பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தின்மேல் உள்ள கொட்டகைக்கே எவ்வளவோ பணம் செலவழித்திருக்க வேண்டும்.

கூட்டத்துக்கு நடுவே ஒரு கோஷ்டி பாடிக்கொண்டிருந்தது. எல்லோரும் நவநாகரிகக் கோலத்துடன் இருந்தார்கள். சில்க் ஷர்ட் அணிந்திருந்தார்கள். இடக் கையில் கடியாரம், வலக் கையில் மோதிரம் மின்னின. ஒருவர் மாறி ஒருவர் பாடினர்கள். எல்லாம் கச்சிதமாக இருந்தன.

கண்ணனும் நாரதரும் அங்கே போய் உட்கார்ந்தார்கள். பஜனையில் ஒரு பாட்டு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் தம் கையில் இருந்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார்கள். ஒருவர், அடுத்த பாட்டு இன்னதென்றும் இன்னர் பாடுவாரென்றும் ஒலிபெருக்கியில் அறிவித்தார். பாட்டு அமைதியாக வந்தது.

“எத்தனை ஒழுங்காக, எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பாடுகிறார்கள்!” என்று வியந்தார் நாரதர்.

ஒரு கட்டத்தில் பாடினவர்களுக்கெல்லாம் காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். ஒருவர் வாரப் பத்திரிகை ஒன்றின் பிரதிகள் ஐந்தாறு கொண்டு வந்து பாடின கோஷ்டியாரிடம் காட்டினர். அதில் ஒரு பக்கத்தில் ஒரு பஜனைக் கோஷ்டியின் படம் இருந்தது. “இதை ஸ்பெஷலாக ஆசிரியரிடம் சொல்லிப் போடச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/91&oldid=1383976" இலிருந்து மீள்விக்கப்பட்டது