பக்கம்:கோயில் மணி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுக்குக் கால் வலித்தது

89

“கண்ணை மூடிக்கொண்டா? அட பைத்தியமே! இங்கே கண்ணை மூடிக்கொள்ளலாமா? கண்ணுக்குத் தானே இங்கே அதிக விருந்து”

நாரதருக்கு இது விளங்கவில்லை.

“அவள் முகம் அசைக்கிறது மதனவல்லி மாதிரி இல்லை?”

“அவள் புன்சிரிப்பு ஒன்று போதுமே! மோகினி சினிமாவில் மோகினியாக யாரோ ஒரு கைராத்து வந்ததே; இவளைப் போட்டிருந்தால்?—”

இந்த ரீதியிலே பேச்சுப் போய்க்கொண்டிருந்தது. நாரதர் காதில் பட்டதும் படாததுமாக விழுந்தது. அவர்களுடைய பேச்சிலே அடிபட்ட மதனவல்லி, பிரமீளாபாய் முதலிய பெயர்கள் எல்லாம் சினிமா நட்சத்திரங்களின் திருநாமங்கள் என்பதை அவர் கண்டாரா என்ன? எப்படியாவது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அங்கே உட்கார்ந்திருக்க அருவருப்பாக இருந்தது.

மெல்ல நகர்ந்து கண்ணள் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்போது, பஜனை செய்கிறவர்களுக்கு அருகில் இருந்த சில கிழவிகள் எழுந்து போனார்கள். அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள இள வட்டங்கள் முண்டியடித்துக் கொண்டு பாய்ந்தார்கள்.

“போதும்; இனிமேல் வேறு இடம் போகலாம் என்று” நாரதரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கண்ணன்.

“என்ன, நாரதா, நெடுநேரம் சுற்றிச் சுற்றிக் கால் வலிக்கிறது. ராத்திரி காலம் வந்து விட்டது. இன்னும் எங்காவது ஓரிடம் மட்டும் போய்விட்டுத் திரும்பலாம் என்று தோன்றுகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/95&oldid=1384046" இலிருந்து மீள்விக்கப்பட்டது