பக்கம்:கோயில் மணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கோயில் மணி

"சுவாமியின் திருவுள்ளம் எப்படியோ, அப்படியே செய்யலாம்.”

ங்கோ ஒரு மூலையில் இருந்த தெரு அது. அங்கே தெருவில் முக்கால் பகுதி கூரை வேய்ந்த குடிசைகள். ஒரு குடிசையில் ஜாலராச் சத்தம் கேட்டது. யாரோ சிறு பிள்ளைகள் பாடுவதுபோல இருந்தது. கண்ணன் அந்தக் குடிசைக்குள் புகுந்தான்.

குழந்தைகள் தப்புத் திப்பென்று தாளம் போட்டுப் பாடினர்கள். ஒருபையன், பதினெட்டு வயசுஇருக்கும்; நின்றபடியே ஆடிக்கொண்டிருந்தான். “கண்ணா மணி வண்ணா கருணை செய்வாய் கண்ணா” என்று பாடினன். அந்தப் பாட்டிலே சங்கீதத்தின் மெருகு இல்லை. குழந்தைகள் கீச்சுக் குரலில் பின்தொடர்ந்து பாடினார்கள்.

ஒரு சின்ன மேடையின்மேல் இரண்டு மண் பொம்மைகள். பழையனவாகி விட்டதனால் வேண்டாமென்று யாரோ எறிந்து விட்டிருக்கவேண்டும். ஒன்று கண்ணன், ஒன்று ராதை. கண்ணன் பொம்மையில் தலையிலுள்ள மயில் குஞ்சம் அடிப்பாகம் மட்டும் இருந்தது. முகத்திலிருந்த மூக்குப் பெருவியாதிக்காரன்போல அமுங்கியிருந்தது. கை இருந்ததே ஒழிய அதில் புல்லாங்குழல் இல்லை. அதைப் பிடித்த பாவனை மாத்திரம் இருந்தது. ராதையையோ கேட்க வேண்டாம். அவளுக்கு ஒரு நீலக் கந்தையைக் கட்டியிருந்தார்கள். இருவருடைய கழுத்தையும் மலரால் அலங்கரித்தார்கள். வெள்ளைக் காசரளி மாலையைக் கண்ணனுக்கும்,சிவப்புக் காசரளியை ராதைக்கும் போட்டிருந்தார்கள். இதுதான் அலங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/96&oldid=1384052" இலிருந்து மீள்விக்கப்பட்டது