பக்கம்:கோயில் மணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுக்குக் கால் வலித்தது

91

நின்றுகொண்டிருத்த பையன் அசைந்து ஆடினான்; சுழன்று ஆடினன். சோர்வு வந்த போதெல்லாம், “கோபிகா ஜீவன ஸ்மரணம்” என்று புண்டரீகம் போட, குழந்தைகள், கோவிந்தா கோவிந்தா!' என்று முழங்கினார்கள்.

கண்ணனும் நாரதரும் நிலைக்கு வெளியிலே உட்கார்ந்துகொண்டு கவனித்தார்கள்.

அரைமணி இந்தப் பஜனை நடந்தது. “சரி, சரி, இனிமேல் என் கண்ணனைப் படுக்கப் போடவேண்டும். நெடுநேரம் நின்று கொண்டே இருந்துவிட்டான்” என்று சொல்லி, ஒரு பலகையில் ஒரு துணியை நாலாக மடித்துப் போட்டான் அந்தப் பையன். அதன்மேல் மெல்லக் கண்ணனை எடுத்துவிட்டான். பிறகு ராதையையும் அருகிலே எடுத்து வைத்தான். எடுக்கிற போது பொம்மையென்றா எடுத்தான்? பூப்போல எடுத்தான். பலவீனமான சிறு குழந்தையைத் தாய் தொட்டிலில் எடுத்து விடுவாளே, அப்படி மெல்ல வாற்சல்யத்தோடு எடுத்துவிட்டான். “ஆராரோ ஆரிரரோ!” என்று தாலாட்டுப் பாட்டுப் பாடினன். “கிட்டப்பா தூங்குகிறான். இனிமேல் பாட்டு வேண்டாம். யாரும் பேசாதீர்கள். அவனுக்குக் கால் வலிக்கும். நான் காலைப் பிடிக்கிறேன்” என்று மெல்லக் கண்ணன் காலை - அந்தப் பொம்மையின் காலைத்தான் - வருடினான். சத்தியபாமைக்குக்கூட அவ்வளவு மெத்தென்று வருடத் தெரியாது. சாட்சாத் கண்ணனுக்கே உபசாரம் செய்வதாக அவனுக்கு எண்ணம்.

நாரதர் அந்தக் கண்ணனைப் பார்த்தார். கண்ணன் கால் வலிக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. திரும்பித் தம்முடன் வந்த கண்ணனைப் பார்த்தார். என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/97&oldid=1384053" இலிருந்து மீள்விக்கப்பட்டது