பக்கம்:கோயில் மணி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலக் குழப்பம்

காட்சி—1

[பிரமதேவனும் நிலமகளும் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கலைமகள் தூரத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.]

நிலமகள்: ஆட்டத்தைச் சரியாகப் பார்த்து ஆடுங்கள். தப்பு ஆட்டம் ஆடுகிறீர்களே!

பிரமதேவன்: என்ன தப்பாட்டம் கண்டுவிட்டாய்?

நிலமகள்: சாதிச் சீட்டு இருக்கும்போதே துருப்பைப் போட்டு வெட்டினர்களே! இப்போது இந்தச் சீட்டு எப்படி வந்தது?

பிரமதேவன்: எங்கே வெட்டினேன்?

நிலமகள்: சற்றைக்குமுன் வெட்டினீர்களே! இந்தத் தப்பாட்டம் வேண்டாம். மறுமடியும் எடுத்து ஆடுங்கள்.

பிரமதேவன்: சீட்டையெல்லாம் போடு. மறுபடியும் கலைத்துப் போடுகிறேன். பழையமாதிரி வேண்டாம்.

காட்சி-2

[திருவள்ளுவர் வீடு. தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடு, வெளியில் கோலம்போட்ட திண்ணையும் மஞ்சள் பூசிய நிலையும். பின்பு இடைகழி. உள்ளே தறிபோடும் ஓசை கேட்கிறது. கொழுகொழுவென்ற உருவமுடைய கம்பர் வீட்டுக்குள் நுழைகிறார், அவருடன் அழகான மாது ஒருத்தியும் செல்கிறாள்.]

திருவள்ளுவர்: (எட்டிப் பார்த்தபடி) யார் அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/99&oldid=1384065" இலிருந்து மீள்விக்கப்பட்டது