9
போது புலவர்களின் தகுதி நன்றாக வெளிப்படும். உறையூரில் உள்ள மக்களும் அத்தகைய அரங்கத்துக்கு வந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பார்கள். விழாக் காலங்களில் அத்தகைய புலவர் அரங்கு நிகழும். புலவர்கள் ஒருங்கு கட்டி ஆராய்வதற்கென்றே ஒரு மண்டபம் இருந்தது. அதற்குப் பட்டி மண்டபம் என்று பெயர்.
இத்தகைய விழாக் காலம் ஒன்றில் கோவூர் கிழாரும் கலந்துகொண்டார். அவர் ஆண்டில் இளையராக இருந்தார். இருப்பினும் அவருக்கு இருந்த புலமையைக் கண்டு முதுகண்ணன் சாத்தனார் வியந்தார். அவர் நாளடைவில் பெரும் புகழை அடைவார் என்ற கருத்துச் சாத்தனாருக்கு உண்டாயிற்று.
நலங்கிள்ளியின் இளமையைக் கண்டு சேர பாண்டியர்கள் அவனுடைய ஆற்றலை மதியாமல் இருந்தார்கள். “இவனைத் தக்க சமயத்தில் நாம் வென்று விடலாம்” என்று பேசிக்கொண்டார்கள். சோழநாட்டிலும் சோழமன்னர் குடியிலே பிறந்த சிலர் அங்கங்கே சிறிய ஊர்களைத் தம்முடையன வாக்கிக்கொண்டு குறுநில மன்னர்களாக வாழ்ந்தார்கள். அவர்களும் தம் மனம் போனபடியெல்லாம் பேசினார்கள்.
நலங்கிள்ளியின் தாயாதிகளில் ஒருவன் சோழ நாட்டில் ஒரு சிற்றூரில் இருந்து வந்தான். நெடுங்கிள்ளி என்பது அவன் பெயர். அவனுக்கு எப்படியாவது சோழநாட்டைத் தனக்கு உரிமையாக்கிக்