பக்கம்:கோவூர் கிழார்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

துடித்துக்கொண்டிருந்த வீரர்கள் சோழப் பெரும் படையில் இருந்தார்கள். அவர்கள் தம் வீரத்தைப் பயன்படுத்தும் காலம் கிடைத்ததே என்று ஊக்கத்துடன் போர் செய்தார்கள்.

பாண்டியனுடைய படையிலுள்ள வீரர்களும் வலிமை மிக்கவர்களே. மற்றவர்களுடைய படையாக இருந்தால் அவர்களுடைய கை மேலோங்கியிருக்கும். சோழ வீரர்களின் வீரம் அவர்கள் ஆற்றலை விஞ்சி நின்றது. யானைப் படைகளும் குதிரைப் படைகளும் காலாட் படைகளும் அணி அணியாகச் சோழர் படையில் இருந்தன.

முதலில் சில நாட்கள் பாண்டியனுடைய படை சோழன் படையை எதிர்த்து மேற்செல்லவொட்டாமல் நிறுத்தியது. ஆனால் தடை உண்டாக உண்டாகச் சோழர் படையில் படைத் தலைமை தாங்கிய மறவர்களுக்குச் சினம் மூண்டது. தங்கள் படை வீரர்களைத் தூண்டினர். சோழப் படை வீரர்கள் தம் ஆற்றலை உள்ளபடியே காட்டத் தொடங்கினர்கள். அதனால் பாண்டியன் படை உள்வாங்கியது. மெல்ல மெல்லப் பின்னே நகர்ந்தது. நாளுக்கு நாள் படை வீரர்கள் பின்னே சென்றுகொண்டே இருந்தார்கள். சோழ மன்னன் முன்னேறிக் கொண்டிருந்தான். சோழ நாட்டின் எல்லையைத் தாண்டிச் சில காவதங்கள் தெற்கே வந்துவிட்டது சோழர் படை.

பாண்டியன் உண்மை நிலையை உணர்ந்தான். இப்படியே விட்டுவிட்டால் சோழன்