பக்கம்:கோவூர் கிழார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

உண்டாயிற்று. இனிச் சோழன் படையை அழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தன.

அறிவும் சூழ்ச்சியும் மிக்க சோழனுக்குச் சேரன் படையுடன் வருவது முன்பே தெரிந்துவிட்டது. அப்படை வந்தால் இன்னது செய்வது என்று அவன் திட்டமிட்டு வைத்திருந்தான். சேரனுடைய படை வந்தவுடன் சோழ நாட்டிலிருந்து புதிய படை ஒன்று புறப்பட்டு வந்து அந்தப் படையைத் தாக்கியது. இந்தப் புதிய படையை யாரும் எதிர்பார்க்கவில்லை.

போர் கடுமையாக நடைபெற்றது. சேரன் படை வந்தமையால் ஒரு நாள், இரண்டு நாள் சோழனுடைய முன்னேற்றம் தடைப்பட்டது. அப்பால் மறுபடியும் சோழப் படை முன்னேறலாயிற்று. பாண்டியன் படை மறுபடியும் தளர்ச்சியை அடைந்தது. சேரன் படையில் உள்ளவர்கள் ஊக்கத்துடன் போர் புரியவில்லை. தம்முடைய நாட்டுக்கு அபாயம் வந்தால் எவ்வாறு வீரத்தைக் காட்டுவார்களோ, அவ்வாறு காட்டவில்லை. ஆதலினால் சோழன் நாளுக்கு நாள் பகைவர் படையைத் தெற்கே துரத்திக் கொண்டு சென்றான்.

தம் மன்னன் ஒவ்வொரு நாளும் வீரச் சிறப்புடன் போராடிப் பகைவர்களை ஓட்டும் இச்செயலைச் சோழ நாட்டு மக்கள் கேள்வியுற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்தன. படையில் சேராத மக்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் புதுப் படை வேண்டுமானால் செல்வதற்கு ஆயுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/32&oldid=1123297" இலிருந்து மீள்விக்கப்பட்டது