பக்கம்:கோவூர் கிழார்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

சமாதானம் செய்வதற்கு முன் தன் கருத்தை முரசறைந்து பாண்டியன் தெரிவித்துப் படைக்கலங்களைக் கீழே போடும்படி தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்டான். சோழனுக்கு இச்செய்தி தெரிந்தது. அவனும் போரை நிறுத்தும் படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இரு சாராரும் ஒன்று கூடினர். சான்றோர்களை உடன் வைத்துக்கொண்டு சமாதானப் பேச்சைத் தொடங்கினார்கள். சோழ மன்னன் கோவூர் கிழாரை வருவித்தான். ஏழெயில் என்ற இடத்தில் சமாதானம் ஏற்பட்டது. சோழன் வென்றதற்கு அடையாளமாக அந்தக் கோட்டையின் கதவுகளில் புலிப்பொறியைப் பொறித்தார்கள். சோழன் தன் யானையின்மேல் குடையைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்ல, அவனுக்குப் பின்னே பாண்டியனும் சேரனும் தங்கள் குடைகளுடன் சென்றனர். சோழனுடைய வீரம் தங்கள் வீரத்தினும் சிறந்தது என்பதை இத்தகைய செயல்களால் அவர்கள் காட்டினர். சோழன் வெற்றிக் களிப்போடு ஏழெயிலில் பவனி வந்தான்.

பவனியின் பிறகு பாசறையிலே தங்கினான். போர் நின்றதனால் புலவர்கள் களித்தனர். சோழ வீரர்கள் ஆரவாரம் செய்தனர். பாசறையில் சோழ மன்னன் தன் அமைச்சர்களும் படைத் தலைவர்களும் சூழ வீற்றிருந்தான். கோவூர் கிழாரும் அங்கே இருந்தார். சோழ மன்னன் தன் பகை வேந்தனுடைய நாட்டுக்கே சென்று வெற்றி கண்ட பெருமையை நினைந்து நினைந்து அவர்