பக்கம்:கோவூர் கிழார்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மகிழ்ந்தார். பாசறையில் வெற்றி மிடுக்குடன் அவன் வீற்றிருப்பதைக் கண்டு கண்களித்தார். தம்முடைய உணர்ச்சியை அருமையான கவியில் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர் அவர். ஆதலின் நலங்கிள்ளி பாசறையில் வீற்றிருக்கும் அந்தக் காட்சியைப் பாடத் தொடங்கினர்.

றம் பொருள் இன்பம் என்ற மூன்றும் இவ்வுலக வாழ்வில் மக்கள் பெறுவதற்குரியவை. இந்த மூன்றிலும் அறம் சிறந்தது. அறத்தால் வந்த பொருளும் அறத்தால் வந்த இன்பமும் சிறந்தவை. சிறப்பையுடைய இந்த மூன்றிலும் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே நிற்பதை அறிவுடையார் உணரலாம். கண்ணால் அதைக் காண முடியாது. இங்கே வெற்றி பெற்ற சோழ மன்னனுடைய குடை யானையின் மேலே உயர்ந்து முன்னே செல்ல, அதனை அடுத்துக் கீழே சேர பாண்டியர்களுடைய குடைகள் சென்றன. அந்தக் காட்சி, சிறப்பான முறைமையுடைய பொருளும் இன்பமும் அறத்தின் வழிப்படும் தோற்றம் போன்று இருந்தது.

நலங்கிள்ளிக்குப் பாண்டி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை இல்லை. மற்ற நாடுகள் உணவின்றிப் பஞ்சத்தால் துன்புறும் காலத்திலும் வளம் குன்றாமல் விளங்கிப் பிற நாட்டுக்கும் நெல்லை வழங்கும் வண்மையை உடைய சோழநாடு அவனுடைய நாடு. ஆதலின்