பக்கம்:கோவூர் கிழார்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தென்பதை உணர்ந்து அவ்வாறு செய்வதாகவே வாக்களித்தான் மன்னன்.

அதன்படியே நலங்கிள்ளி தன் படையின் ஒரு பகுதியையும் அதனுடன் ஒரு படைத் தலைவனையும் அனுப்பினான். படை ஆவூர்க் கோட்டையைச் சூழ்ந்துகொண்டது. ஆனால் கோட்டை வாயிற்கதவை மோதி அழிக்கவில்லை. அரசன் முற்றுகை மாத்திரம் இடச் சொல்லியிருந்ததே காரணம். கோட்டைக்குள் நெடுங்கிள்ளி தன் படையுடன் இருந்தான். நலங்கிள்ளியின் படை முற்றுகையிட்டதைக் கண்டு அவன் அஞ்சவில்லை. தன்னுடைய படைவீரர்களை அம்பு எய்யும்படி ஏவினான். அவர்கள் மதிலின்மேல் ஏறி அம்பு எய்யும் புழைக்கருகில் மறைந்து எய்தார்கள். நலங்கிள்ளியின் படைவீரர்கள் தக்க கவசங்களை அணிந்து கேடயங்களுடன் வந்திருந்தார்கள். ஆதலின் உள்ளிருப்போர் விட்ட அம்பு அவர்களுக்கு அதிக ஊறுபாட்டை உண்டாக்கவில்லை. புறத்தே நின்ற படைவீரர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டார்களேயன்றி, மதிலின் மேல் ஏறவோ, உள்ளே ஆயுதங்களை வீசி எறியவோ முயலவில்லை. புறத்தே நின்றவர்கள் போர் செய்யாமல் இருக்கும்போது அம்பை எய்து ஏன் வீண் செய்யவேண்டுமென்று அகத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து அம்பு எய்வதை நிறுத்திக்கொண்டார்கள்.

மதிலுக்குப் புறத்தே தங்கியிருந்த படைகள் காவலாக நின்றன. மதிலின் உள்ளே அகப்பட்ட