பக்கம்:கோவூர் கிழார்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

ஒன்றும் பேச வழியின்றி வாயடைத்து அமர்ந்திருந்தான்.

கோவூர் கிழார் மீண்டும் தமது பொருளுடைய சொற்களை வீசலாயினர். இப்போது நெடுங்கிள்ளி அவர் கூறும் அவலக் காட்சிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான் என்பதை அவனுடைய முகம் அவருக்கு எடுத்துக் காட்டியது. நன்றாகப் பதமானபொழுது அடித்து இரும்பை உருவாக்கும் கொல்லனைப்போலத் தம் சொல்லால் நெடுங்கிள்ளியின் உள்ளத்தை அடித்துப் பதப்படுத்தித் தாம் எண்ணி வந்த காரியத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார் புலவர் பெருமான்.

“அந்த மங்கையருடைய நிலை எவ்வளவு இரங்கத்தக்கதாக இருக்கிறது! தம்முடைய கணவர் அருகில் இருக்க, வேளைக்கு ஒரு பூவை முடித்து மணமும் மங்கலமும் விளங்க மனை விளக்குகளாகக் திகழ்பவர்கள் அவர்கள். இப்போது தம் கணவன்மார் அருகில் இருக்கவும் பூவோடு முடிக்கும் கூந்தலை வெறுமையாக முடிக்கிறார்கள். மக்கள் உணவில்லை யென்று இடும் கூக்குரல் கிடக்கட்டும். வீட்டிலே குடிக்க நல்ல தண்ணீர் இல்லை என்று வருந்துகிறார்கள். இவற்றையெல்லாம் உன் கண் கொண்டு பார்த்தாயா? இதுவா உன் ஆண்மைக்கு அழகு? நீர்வளம் மிக்க சோழ நாட்டிலே உண்ணும் நீருக்கும் பஞ்சம் உண்டாகும்படி இந்தக் கோட்டையை ஆக்கின நீ, சோழ குலத்தில்