பக்கம்:கோவூர் கிழார்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நெடுங்கிள்ளி அவர் உரையின்படியே செய்யத் துணிந்தான். கோவூர் கிழாரையே முன்னிட்டுக் கொண்டு கோட்டைக் கதவைத் திறந்து விட்டான். சமாதான நோக்கத்தோடு நெடுங்கிள்ளி வருவதனை அறிந்த சோழப் படையினர் ஆரவாரித்தனர். கோட்டைக்குள் அது காறும் அடைபட்டிருந்த மக்கள் மதிலுக்குப் புறம்பே வந்து சொர்க்க போகம் பெற்றவர்களைப் போல் ஆனார்கள். கோவூர் கிழாரைத் தம்முடைய உயிரை மீட்ட பெரியார் என்று வாழ்த்தினார்கள். நெடுங்கிள்ளி தன் படையுடன் மீண்டும் தன் சொந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.

கோவூர் கிழாருடைய முயற்சியால் போரின்றி அமைதி உண்டானதையும், நெடுங்கிள்ளி பகையுணர்ச்சி நீங்கிக் கோட்டையை விட்டு அகன்றதையும் கேள்வியுற்ற சோழநாட்டார் அக்கவிஞர் பிரானைப் பாராட்டிப் போற்றினார்கள். நலங்கிள்ளி அவரைத் தெய்வமாகவே கொண்டாடினான்.


6
புலவர் உயிரை மீட்டல்

வூர்க் கோட்டையினின்றும் சென்ற நெடுங்கிள்ளிக்குக் கோவூர் கிழார் கூறிய அறிவுரைகள் நெடுநாள் மனத்தில் இருக்கவில்லை. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தை