பக்கம்:கோவூர் கிழார்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அரச குலத்தினரிடம் பெரிய உருவை எடுத்து நின்றது.

வேளிர்கள் மெல்ல மெல்ல நெடுங்கிள்ளியின் மனத்தை மாற்றினார்கள். அவன் மறுபடியும் நலங்கிள்ளி சோர்ந்திருக்கும் சமயம் பார்த்து உறையூரையே கைப்பற்ற வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

ரு சமயம் நலங்கிள்ளி சோழ நாட்டிலே மூண்ட கலகம் ஒன்றை அடக்குவதற்காக ஒரு படையுடன் நேரே சென்றிருந்தான். ஓர் அரசன் புதிதாக ஆட்சிக்கு வந்தால் அவன் பெரும் படையும் தக்க துணையும் உடையவனாக இல்லாமல் இருப்பின் அமைதியாக ஆட்சி புரிவது எளிதன்று. தமிழ் நாட்டு மன்னர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்த செய்தியைப் பழைய நூல்களில் காண்கிறோம். மிகப் பெரிய போராக இல்லா விட்டாலும், சிறிய சிறிய போர்கள் நிகழும். சேர சோழ பாண்டியர் குடியிற் பிறந்த மன்னர்கள் இத்தகைய சிறிய போர்கள் பல செய்து வெற்றியடைந்ததைத் தெரிவிக்கும் பாடல்கள் சங்க காலத்து நூல்களில் இருக்கின்றன.

நலங்கிள்ளி ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆயினும் உள்நாட்டுப் பகையை முற்றும் ஒழிக்கவில்லை. நெடுங்கிள்ளி நினைத்தபோதெல்லாம் இடையூறு செய்து வந்தான். வேறு குறுநில மன்னர்களும் அடிக்கடி அல்லல் கொடுத்து