பக்கம்:கோவூர் கிழார்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

அவன் உறையூரில் இல்லாதிருந்தமையால் கோவூர் கிழார் வேறிடங்களுக்குச் சென்றிருந்தார். புலவர்கள் எப்போதும் ஓரிடத்தில் தங்கியிருப்பது வழக்கம் அன்று. அவர்கள் இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் அவர்களை இருக்கச் செய்வதில்லை. சோழ நாட்டிலே பிறந்தவரானாலும் மற்ற நாடுகளில் உள்ள மன்னர்களும் புலவர்களும் மக்களும் கோவூர் கிழாருடைய புலமை நலத்தை உணர்ந்து அவரை வரவேற்றார்கள். அதனால் அவர் உறையூரினின்றும் புறப்பட்டுப் பாண்டி நாட்டுக்குப் போயிருந்தார். நெடுங்கிள்ளி இப்படிச் செய்வான் என்று அவரும் எண்ணவில்லை.

நலங்கிள்ளி விரைவில் தன் வேலையை முடித்துக்கொண்டு ஆவூர்க்கோட்டையில் வந்து தங்கினான். இந்த முறை நெடுங்கிள்ளியை அடியோடு தொலைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்கு உண்டாயிற்று. என்ன செய்யலாம் என்பதை யோசித்தான். கோவூர் கிழார் ஊரில் இல்லாதது பெருங் குறையாக இருந்தது. அவர் இருந்தால் போரின்றியே சமாதானம் செய்ய முயலுவார். எதற்கும் வேறு ஒரு புலவரைத் தூதாக அனுப்பி நெடுங்கிள்ளிக்கு அறிவுரைகூறச் செய்ய நினைத்தான். இளந்தத்தனார் என்னும் புலவர் அப்போது நலங்கிள்ளியினிடம் வந்திருந்தார். அவருக்கு வேண்டிய பரிசில்களை வழங்கி, “நெடுங்கிள்ளியிடமும் போய்ப் பாடி அவன் உறையூரை அடைத்துக்கொண்டிருப்பது தவறு என்பதை எடுத்துக் காட்டுங்கள்” என்று சொல்லி