55
என்னவோ சொல்லிப் பார்த்தார். நெடுங்கிள்ளி நம்பவில்லை. அவர் சிறைக்குட் புகுந்தார். அவரை ஒறுத்து நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்படி ஏவினான் நெடுங்கிள்ளி.
உறையூருக்குள் சென்ற இளந்தத்தனார் வரவில்லையே என்று காத்திருந்தான் நலங்கிள்ளி. புலவர் சிறைப்பட்ட செய்தி அவனுக்குத் தெரியாது. சில நாட்கள் சென்றன. நெடுங்கிள்ளி செய்யும் உபசாரத்தால் புலவர் மயங்கி அங்கேயே தங்கிவிட்டார் என்று எண்ணினான். ஆனால் அந்த எண்ணம் அவனுக்கு நீடிக்கவில்லை. ஒருகால் புலவருடைய அருமை தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருப்பானோ என்ற ஐயமும் உண்டாயிற்று. இப்படி அவன் கலங்கிக்கொண்டிருந்தபோது கோவூர் கிழார் வந்தார். சென்ற இடத்தில் அவருக்குச் சோழ நாட்டுச் செய்திகள் தெரிந்தன. நெடுங்கிள்ளி மறுபடியும் பழைய குற்றத்தையே செய்யத் துணிந்ததைக் கேள்வியுற்றார். அவனை உயிரோடு ஆவூரினின்றும் வெளியேறச் செய்த பொறுப்புடையவராதலால், இப்போதும் ஏதாவது செய்து இரண்டு கிள்ளிகளுக்குமிடையே நிலையான சமாதானத்தைச் செய்விக்க வேண்டும் என்ற ஆவலோடு வந்து சேர்ந்தார்.
வந்தவுடன் நலங்கிள்ளியை அணுகி நிகழ்ந்தவற்றைத் தெரிந்துகொண்டார். நெடுங்கிள்ளி உறையூரைக் கைப்பற்றியதை எண்ணிச் சினந்திருந்த நலங்கிள்ளி இப்போது இளந்