பக்கம்:கோவூர் கிழார்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

நெடுங்கிள்ளி கோவூர் கிழாரைக் கண்டவுடனே உள்ளூற அச்சங்கொண்டான்; புலவர் பெருமானே! அமர வேண்டும்” என்றான்.

நான் அமர மாட்டேன். முதலில் புலவர் இளந்தத்தனாரைச் சிறையினின்றும் விடுதலை செய், பிறகுதான் நான் அமர்ந்து பேச இயலும்” என்றார்.

புலவனா? ஒற்றனல்லவா அவன்? புலவனென்று நான் ஏமாந்து போவேனா?

கோவூர் கிழாருக்குக் கோபம் அதிகமாயிற்று. மன்னர்களுக்கு, அதுவும் பகையுணர்ச்சியுள்ள மன்னர்களுக்கு, கண் சரியாகத் தெரியாது. புலவர்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமற் போவதைக்காட்டிலும் பெரிய தவறு இல்லை. நான் புலவன். நான் சொல்லுகிறேன்: இளந்தத்தனார் என்னைப்போல ஒரு புலவர்” என்று கூறினார்.

“புலவர் பெருமானே! மன்னிக்க வேண்டும்; அவர் புலவர் என்பதற்கு அடையாளம் என்ன?”

“அடையாளமா கேட்கிறாய்? அவரிடத்தில் உள்ள புலமை அடையாளம்; அவரிடத்தில் குடி கொண்டிருக்கும் தமிழ் அடையாளம். அவர் பொன்னும் பட்டாடையும் புனைந்து மன்னரைப் போல் இருக்க மாட்டார். எங்களுக்குச் செல்வம் இல்லை; ஆரவாரம் இல்லை; பொன் இல்லை; கண்ணைக் கவரும் ஆடையணிகள் இல்லை; அடையாளங்கள் இல்லை. யார் தரமறிந்து பாராட்டு