பக்கம்:கோவூர் கிழார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

தீர்மானித்துக்கொண்டார்; ஆகவே, அதற்கு ஏற்ற வகையில் பேசினார்.

“அறிவில்லாத மன்னனால் மக்களுக்குத் தீங்கு வரத்தான் வரும். புலவர்களையே மதிக்காதவன், குடிமக்களின் உயிரை மதிக்கப் போகிறானா? முன்பு குழந்தைகளையும் பெண்டிரையும் பட்டினி போட்டுக் கொல்லத் துணிந்தவன்தானே அவன்?” என்று நலங்கிள்ளி கூறினான்.

“அவன் செய்வது இருக்கட்டும்; போர் என்று வந்தால் ஒரு சாரார்மட்டும் தீங்கு இழைப்பதில்லை. இரு சாராரும் மக்களுக்கும் பொருள்களுக்கும் அழிவை உண்டாக்கி அமைதியைக் குலைத்துத் தாமும் அமைதியின்றி நிற்கிறார்கள்” என்றார் புலவர்.

“அமைதியை விரும்புபவன்தான் நான். முதுகண்ணன் சாத்தனாரும் தாங்களும் கூறிவந்த அறிவுரைகளை நான் மறக்கவில்லை. ஆனால் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல அமைதியைக் குலைக்கும் பகைவனைப் போர் செய்துதானே அடக்கவேண்டும்?” என்று சோழ மன்னன் கேட்டான்.

“பெரிய பகையாக இருந்தால் மன்னர்பிரான் சொல்வது உண்மைதான். ஆனால் நெடுங்கிள்ளியின் பகை அத்தகையதன்று. ஒரு குலத்திற் பிறந்தமையால் உண்டான ஆசை அது. அவனும் சோழ குலத்திற் பிறந்தவன். நீங்களும் அக் குலத்திற் பிறந்தீர்கள். உங்கள் தலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/68&oldid=1111098" இலிருந்து மீள்விக்கப்பட்டது