உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவூர் கிழார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கட்டுவித்த கரைதானே? நாம் வாழ்கிறோமே, இந்த உறையூர்; இந்நகரம் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கு அந்த மன்னர் பிரான்தானே காரணம்?”

இவ்வாறு உறையூரில் வாழும் குடிமக்களில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் சோழநாட்டின் அரசனாக நலங்கிள்ளி என்பவன் அரியணை ஏறியிருந்தான். அவன் இளம் பருவமுடையவன். அதனைப்பற்றியே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பண்டைக் காலந்தொட்டு வரும் பழமன்னர் குடிகள் தமிழ் நாட்டில் மூன்று உண்டு. சோழர் குடியும் பாண்டியர் குடியும் சேரர் குடியும் ஆகிய இந்த மூன்று குலமும் பழமைக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன. அந்த மூன்றிலும் சோழர் குலத்தின் பெருமையே பெருமை!”

“ஆம்! நாம் சோழ நாட்டில் வாழ்கிறவர்கள். அதனால் நமக்குச் சோழர் குலந்தான் உயர்வாகத் தெரியும். பாண்டி நாட்டில் வாழ்கிறவர்களைக் கேட்டுப் பார். அவர்களுடைய மன்னர் குடியையே சிறப்பிப்பார்கள்.”

“உண்மைதான். ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பு மற்றவர்களுக்கு வராது. சோழ நாடு என்றாலே சோற்று வளம் உடையதென்பதை மற்ற நாட்டுக்காரர்களும் ஒப்புக்கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள ஆறுகளுக்குள் காவிரி பெரியது. இந்தப் பெரிய ஆற்றினால் வளம் பெறும் சோழ மண்டலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/7&oldid=1089675" இலிருந்து மீள்விக்கப்பட்டது