பக்கம்:கோவூர் கிழார்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

செய்தால் குடிப் பெருமைக்கு இழுக்கு வந்து விடும். தொன்றுதொட்டு இந்தக் குடிக்குப் பகைவராக இருக்கும் சேர பாண்டியர்கள் இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆதலின், நெடுங்கிள்ளியின் விருப்பத்தை அறிந்து ஒருவகையாக நிறைவேற்றி, இனி இத்தகைய சண்டை நேராமல் அமைதியை உண்டாக்குவது தான் தக்கது என்று எனக்குத் தோன்றுகிறது.”— கோவூர் கிழார் தம் பேச்சை நிறுத்தினார். அரசன் சிந்தனையுள் ஆழ்ந்தான். அமைச்சர்கள் கோவூர் கிழார் பேசியதைக் கேட்ட பிறகு, அவர் கூறும் வண்ணமே செய்தல் நலம் என்று தெளிந்தார்கள்.

சிறிது நேரங் கழித்து நலங்கிள்ளி கோவூர் கிழாரை நோக்கிப் பேசலானான்: “புலவர் பெருமான் கூறியது அனைத்தையும் நான் சிந்தித்தேன். அமைதி வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால் அவன் அதற்கு இடங் கொடுக்கவில்லையே! அவன் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தானே சோழ அரசுக்கு உரியவனாக முடி சூட வேண்டுமென்று அவன் விரும்பினால் அதற்கு நாம் உடம்படுவதா?”

இப்போது புலவர் அதற்கு விடை கூறினார்; “அவனுக்கு அந்த ஆசை இருப்பது இயல்புதான். ஆனாலும் இதுகாறும் அவனுடைய முயற்சி ஒன்றும் பயன்படவில்லை. யாரோ நண்பர்கள் அவ்வப்போது தூண்டி விடுவதனால் இத்தகைய காரியங்

5