66
களைச் செய்கிறான் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் அவனை அணுகி, எப்படியாவது அவனுக்கு நல்லுரை கூறி இனித் தொல்லை கொடுக்காமல் வாழும்படி செய்யக் கூடும் என்று நினைக்கிறேன். என் முயற்சி வெற்றி பெற்றால் எல்லோருக்கும் நன்மை, சோழர் குடிக்கும் இழுக்கு வராது” என்றார்.
“நீங்கள் அவனைத் திருத்த முடியும் என்று உறுதியாக நம்பினால் நான் அதற்குத் தடை கூறவில்லை. எப்படியாவது நாட்டில் அமைதி உண்டானால் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன்” என்று நலங்கிள்ளி கூறினான். அவனுடைய சினம் ஒருவாறு ஆறியது.
மேலே கோவூர் கிழார் தம்முடைய அன்புத் தொண்டிலே ஈடுபட்டார். நெடுங்கிள்ளியிடம் சென்றார். அவனுக்கு நேர்மையான நெறி இது என்று எடுத்துக் காட்டினார். அவருடைய அறிவு நிரம்பிய பேச்சு வென்றது. நெடுங்கிள்ளி சோழ நாட்டின் ஒரு பகுதியைத் தனக்கு உரிமையாகப் பெற்று வாழ ஒப்புக்கொண்டான். நலங்கிள்ளியும் கோவூர் கிழார் கூறியதற்கு இணங்கினான்.
மீட்டும் சோழ நாட்டில் அமைதி நிலவியது. நெடுங்கிள்ளி தன் பகையுணர்ச்சியையும் ஆசையையும் விட்டொழித்து அமைதியாக வாழ்ந்தான். நலங்கிள்ளி பழையபடியே உறையூரில் இருந்து அரசாட்சி செய்து வந்தான். கோவூர் கிழாருடைய நட்பால் தனக்கு வரும் புகழையும்