80
குடி போகக்கூடாதே என்றெண்ணி ஓடி வந்தேன்.”
“இப்போது என்ன நடந்துவிட்டது? தங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லையே!”
“விளங்கச் சொல்கிறேன். முதலில் அந்த இளங் குழந்தைகளே விடும்படி உத்தரவு செய். புலவருலகத்தின் பழியும், அறக் கடவுளின் சாபமும், என் போன்றவர்களின் வெறுப்பும் அணுகாமல் வாழவேண்டுமானால், உடனே அந்தக் குழந்தைகளைப் பலியிடுவதை நிறுத்தச் சொல்.”
“அவர்கள் மன்னர் குலத்தையே நடுங்க வைத்த பாம்பின் குட்டிகள்...”
“கோழைகள் பேசும் பேச்சு இது. நெஞ்சில் இரக்கம் இல்லாதவர்கள் பேசுவது. இவர்கள் யார் தெரியுமா? சொல்லுகிறேன் கேள்.”
அரசன் இப்போது உண்மையிலே நடுங்கினான். கோவூர் கிழாரின் சீற்றம் அவனைத் திணற வைத்தது. ஒன்றும் எதிர் பேச அவனால் முடியவில்லை.
“இவர்களைப்பற்றிச் சொல்வதற்குமுன் நீ இன்னானென்பதை முதலில் உணர்ந்து கொள். அறிவில்லாத பறவைச் சாதியிலே பிறந்த ஒரு புறாவுக்காகத் தன் உடம்பையே அரிந்து கொடுத்த கருணையாளன் குடியிலே பிறந்தவன் நீ. தன் உயிர் போனாலும் பிற உயிர் போகக் கூடாதென்று சிபிச் சக்கரவர்த்தி செய்த அருஞ்