பக்கம்:கோவூர் கிழார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உடையவனாதலின் நலங்கிள்ளி பகைவருக்கு அஞ்சாமல் பெரும் படையைச் சேர்த்து மக்களுடைய மதிப்பையும் பெறும் நிலையில் இருந்தான். நல்ல வேளையாக அந்த மன்னனுக்கு அமைச்சராகவும் அவைக்களப் புலவராகவும் வாய்த்தார் சாத்தனார் என்ற சான்றோர். அவர் உறையூரில் வாழ்பவர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நிரம்பிய புலமையுடையவர்; சிறந்த கவிஞர்; சோழ மன்னர்களின் பெருமையை நன்கு அறிந்தவர்; நலங்கிள்ளியின் காலத்துக்கு முன்பே சோழ மன்னனது அவைக்களத்துப் புலவர்களில் சிறந்தவராக இருந்தார். நலங்கிள்ளி தன் தந்தை இறந்தவுடன் இளமையிலே முடியைத் தாங்கவேண்டி வந்தது. சோழர் குலத்துக்குரிய அரியணையில் அவ்வளவு இளம் பருவத்தில் அவன் ஏறுவதனால் அவனுக்கு வழிகாட்டத் தக்க சான்றோர்கள் இருக்க வேண்டுமென்று அவனுடைய அன்னை எண்ணினாள். அவன் தந்தை இருந்த காலத்தில் உறையூர்ச் சாத்தனாரின் புலமையையும் சதுரப் பாட்டையும் நன்கு அறிந்தவள் அவள். ஆதலின் அப்பெரியார் தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணையாக வாய்த்தால் நலமாக இருக்கும் என்று எண்ணினாள். ஒரு நாள் அப் புலவர் பெருமானை வருவித்துத் தன் கருத்தைத் தெரிவித்தாள்.

ஆண்டில் இளையராக இருக்கும் அரசர்களுக்கு அறிவுரை கூறும் பெரியோர்களை முதுகண் என்று சொல்வது பழைய கால வழக்கம். நலங்கிள்ளியினுடைய அன்னையின் விருப்பப்படியே சாத்தனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/9&oldid=1089683" இலிருந்து மீள்விக்கப்பட்டது