பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் எவ்விடம் பிறந்தென்; எவ்விதஞ் சிறந்தென் ? செவ்வி ஒழியவே சிக்கெனத் துன்பம் கவ்வி உடலெலாங் கருகிட, வாழ்வின வவ்விட ஆயினேன், வன்னியில் மெழுகதே. இன்னுமென் துயரினை இயம்பிட முற்படின் மின்னுமும் கண்களோ அருவியை ஈன்றிடும்; குன்றுமென் நிலையால் குன்ருெடு கொடுமையும் கன்றும்; கேளுமென் கதைக்குடங் கவிழ்ப்பனே: ந்ேதவுங் திரியவும் நிகழ்த்தாது குஞ்சினை ஏந்தலும் இலாமல் இறக்கிடும் மீன்போல், நேர்ந்தவென் அன்னையும் நேயமாய் என்னேயே ஈந்தனள் உலகினுக் கியற்றிடப் பணியதே. நள்ளிருட் டினிலும், நடுவெளி யினிலும் தள்ளிப் பின்னுளோர் தருக்கொடு முடுக்கவே வெள்ளித் திவலையான் வீழ்ந்துவர லானேன், துள்ளிக் குதித்திடுங் துணிகன் றெனவே. 98