பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். கற்களின் மேலெலாங் கடுகவே வீழ்ந்து சல்லிகள் உருட்டியுஞ் சந்தெலாம் புகுத்தும் 'ஒல்லென உருண்டமை ஒழிந்திட கிலத்தில் மெல்லவே நடந்தேன், பள்ளங்கள் தேடியே. 'சலசல. வொலியொடு சிலுகிலு எனவே "கலகல எனவே கவிந்துங் குவிந்தும் பலபல நாட்களாய்ப் பகலோ டிரவும் நிலவுல கதன்மேல் ஓடினேன், நெளிந்தே. கெட்ட குடியேசீர் கெட்டு வருதலாய், எட்டிய இடமெலாம் எமனே சூழ்ந்திடச் சட்டியுஞ் சகதியுஞ் சார்ந்தே படிந்திடக் கட்டிளே யோர்முதற் கிழவருங் கலக்கவே, அடியிடம் அல்லலென் றசைந்துமேற் சேர்ந்து, கடியதி உதைப்பக் கலங்கி, இடையே நெடியவே ஒட்டமாய் நெஞ்சம் பதறிட, மடியவே எண்ணி மனஞ்சலித் தலைந்தனே, 99