பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். வெப்பத் தினலே வெந்ததென் உடலெனச் செப்பியே கருநோய் செகுத்திட அன்னையும் ஒப்பியே அழைத்தனள் உயர்தண் தென்றல: தப்பா தடைந்தெனத் தழுவியே கின்றதே. உண்மை ஒளியாற் பொய்யிருள் அகறல்போல், திண்மை பிறந்ததுங் திகைப்பெலாம் அறுதல்போல் தண்மை அணுகவுக் தீநோய் பறந்திட வெண்மை பெற்றுடல் வெலவெலப் படைந்தே, இன்னெ தன் றென்னல் இயம்ப இயலா தென்ன தகமெலாம் அயர்வதை யறிந்தேன்; 'தன்னலங் கருதாத் தக்கோர் தோன்றிட உன்னிடங் குறி"யென உரைத்தனள் அன்னையே. குடியாய்க் கொண்டு குளிரெனே வாட்டப் பிடியாய் நடுக்கம் பிடித்திடப் பசும்பொன் 'தடியாய் மின்னல் தகர்ப்பேன்’ என அஞ்சித் துடியாய்த் துடித்தே இடியாய்க் கத்தியே,

  • கருநோய் - கருப்பம்: கருமையாகிய நோய். 9 தடி - தடிக்கம்பு மின்னல்.

103