பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் குலேயைத் தள்ளியே குலைந்திடும் வாழைபோல், கொலைசெய் கருவியாம் அழகமை மலர்போல், விலையிலா மக்களை விண்ணின்று மாரியாய் மலையினிற் பொழிந்து மறைந்தொழிங் தேனே. விண்னெலாம், நிலமெலாம் வெருவியே நடந்ததால் எண்ணிலாத் துன்பங்கள் எய்தினும், ്ത്ര് மண்ணுளோர் வளமெலாம் மலிந்து மகிழ்வதை எண்ணினேன். உண்டேன் ஈத்துவக்கும் இன்பமே. ெேரனத் தோன்றினேன். ஆறென ஓடினேன்: வாரலேக் கடலென வளர்ந்தேன்; ஆவியாய் கேரிலா முகிலாய் நேர்ந்தேன்; வாழ்த்திடப் பாரெனும் மடந்தைக்குப் படைத்தேன் மழையே. (கவி விருத்தங்கள்) 104