பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பெற்றெடுத்த தங்தையரே, மைந்தர் தம்மைப் பெரும்பள்ளி தனிற்சேர்த்து விட்டோம்; அன்னர் கற்றிடுவார்: கற்பிப்பார் என்றே விேர் கருத்தின்றி அமையாதீர்; பள்ளி விட்டால் சுற்றுகின்ருர் - அலைகின்ருர் - திரிகின் றரால்: சுருக்கென்று தைக்கின்ற அன்புச் சொல்லால் மற்றவரை வீடடக்கிப் பயில்கே ரத்தில் மல்லிகைமுன் வண்டெனவே பயில வைப்பீர் ! பள்ளிதனில் ஆசிரியன் பயிற்று விப்பான்: படிப்பிக்கும் வீட்டாசான் பெற்ருே னன்ருே ? துள்ளிவரும் சேயவனே 'இன்றெப் பாடம் துவக்கிவைத்தார்; விளக்கதனை என்பீர் ! அன்பை அள்ளிவிடும் அன்னையரே, தும்பால் உண்டே அறுசுவையாங் கடிவாளம்; அதனைக் கொண்டே தெள்ளுகல்வி வண்டியிலிக் குதிரை பூட்டிக் கொள்ளருந்தப் பின்செய்வீர்: கொழித்து வாழ்வான். 111