பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். எழுத்தினிலே சிறுபிழையுங் தவிர்க்க வேண்டும் ! எடுப்பான தமிழ்ச்சொல்லிற் பேச வேண்டும் ! பழுத்தசுவைத் தமிழ்ச்சொல்லிற் பாகே உண்டு: பார்த்தெடுத்துச் சுவைத்ததனை வழங்கல் வேண்டும் ! இழுத்திழுத்துப் பிறமொழியைக் கலக்கும் அந்த இழிசெயலை விடவேண்டும் ! உலகோர் நூம்மை வழுத்துவதற் காங்கிலத்திற் புலமை கொள்க ! வாழ்க்கைக்குக் குறள்கொண்டு நீடு வாழ்க! நாட்டினிலே நல்லவர்கள் பெருக வேண்டும் ! நல்லவர்கள் சொல்லறிந்து நவில வேண்டும் ! நீட்டுகின்ற சொல்லதனின் பொருள றிந்தால் நிரம்பைக்கும், இடும்பைக்கும் நிகழ்வே யில்லை; தேட்டவளத் தமிழகத்தில் தோன்றுக் தாழ்வு தேனுளத்திற் சுரக்கின்ற சொலினல் தேயும்: கோட்டமிலாப் பொருளமைத்துக் குவிக்குஞ் சொல்லால் கோடானு கோடியின்பங் குவித்து வாழ்க ! (எண்சீர் ஆசிரிய . விருத்தங்கள் ) 113