பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் முதுபெரும் புலவர் மயிலை. சிவமுத்து அவர்கள் (தலைவர், மாணவர் மன்றம், சென்னே..) வழங்கிய மதிப்புக் கருத்துரை : கோவை இளஞ்சேரன் கோத்தளித்த பாமாலை தேவை நம் மாணவர்தம் சிந்தனைக்கே;-பூவை நிதம் மோந்தளிக்கும் வண்டின் - முயற்சியிது, வாழ்ந்தொளிர்க, தீந்தமிழாம் மாணவர்பத் தே ! (ஒ-ம்.) மயிலே, சிவமுத்து. மாணவர் பத்து. மாண்பினை ஆக்குவோர் மானக்கர்; இச்சொலே மாண்புறு சான்ருேர் வகுத்தனர் - காண்தகு மாணவர் என்பவர் மாண்பினை ஆக்கியே, ஆணவம் ஆழ்த்திவாழ் வோர். வாழ்வோர் இசைவிழா: வாழ்வில் இளமையோ தாழ்வில் தமிழிசைப் பாடலாம் - யாழ்படு தேனிசை என்னத் தகுவதே, மாணவர் வானிசைத் தேன்பரு வம். 114