பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் விடியற் பொழுதில் விழித்துப் பயிலின் கடிதிற் படிந்திடுங் கல்வி: படித்தவை ஒய்விற் படுக்கையில் ஒர்ந்துசிங் தித்திடத் தூய்தாய் அறிவூன்றும் கால் காலைப் படிப்பும், கடமைத் துடிப்பொடு மாலைக் குதிப்பும் மருவிட - வாழைக் குருத்தின் வளர்வும், திருத்த அறிவும், எருத்தின் வலிவும் எழும் எழும்பொது நூற்கள், எழுஞ்செய்தித் தாட்கள் பழம்பே ரிலக்கியப் பாடல் - உளம்புக நாடியே கற்றிடும் மாணவர், நாடெனும் ஏடதிற் செம்பொன் னெழுத்து. எழுத்துப் பிழையோ கழுத்துறு புண்ணும்: கழுத்துறு புண்ணுெரு கூற்ரும் - பழுத்தால் தேன்தமிழ் வாழ்ந்திடத் தேர்பிழை நீக்கியே மாக்திடல் மாணவர் மாண்பு. (நேரிசை வெண்பாக்கள் ண்ைடலித்த அந்தாதித் தொடை.) I 16