பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். குளியல் நலன். காலைக் குளியல் கவினும், நலனுமாம்: மாலைக் குளியல் மயக்கு. குளித்து வரின்அயர், கொட்டாவி, சோம்பல். இளித்துச் சொறியல் இலை. எழில்பெறச் சீவல். எண்ணெய் தடவி எழில்பெறச் சீவிடின் எண்ணமும் எய்தும் எழில். ஒட்டடைக் கம்பதை ஒக்குமே, எண்ணெயைத் தொட்டிட்டுச் சீவாத் தலை. உடையில் ஒழுங்கு. அழுக்கிலா ஆடை, அமுக்கா றிலாமை இழுக்கிலா மாணவர்க் கின்பு. பொத்தான் பொருத்திடாச் சட்டை அணிதலின் கத்தரித்து வீசல் கவின். 119