பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பொருளியல் வல்லுநர் டாக்டர். பா. நடராசன் அவர்கள் M. Ä., D. Litt., M. L. Ä., வழங்கிய மதிப்புக் கருத்துரை : கவிதை இனிது கருத்து நிறைந்தது; காலத்தை நிழலிடுவது. ஓய்வற்ற உழைப்பாளர் காலே வரக் கண்டு ஏங்கும் துன்ப நிலையைச் சொல்வது. 'இன்றும் வருவது கொல்லோ, நெருநலுங் கொன்றது போலு நிரப்பு’ - என்ற குறளே நினைப்பூட்டுவதாயுள்ளது. இரவு தேன் கூடு; உழைப்பாளர் தேனி, காலே அது கலைக்கும் குரங்கு’ என வரும் உவமைகளில் கவிதையின் புதுமணம் வீசுகிறது. - (ஒம்.) பா. நடராஜன். கசக்கும் காலே. மரங்களுக்கு வேர்போலுந் தொழிலாளர் மன்பதைக்கே உழைத்து ழைத்தும் உரங்காணுர், உழன்றிடுவார்; அவர்க்கெல்லாம் உறக்கந்தான் ஒய்வு நேரம், உறங்கவரும் இரவவர்க்குத் தேன்கூடாம்: அவர்ஈயாம்; அதைக் கலைக்கக் குரங்கெனவே வருங்காலே கனியெனினும், குமட்டல்தருங் கசப்பே யன்ருே : 127